சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “நந்தன்” இப்படத்தை தொடர்ந்து , தற்போது ஆங்கிலத்தில் ’ப்ரீடம்’ என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சசிகுமாரின் பிறந்த நாளில் ’ப்ரீடம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த படத்தின் நாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். “கழுகு”, “சவாலே சமாளி”, “1945” போன்ற படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தவறே செய்யாமல் இலங்கை சிறையில் அகதியாக சிக்கிக்கொண்ட இருவர் அதிலிருந்து எப்படி தப்பிக்கின்றனர் என்பது தான் இப்படத்தின் கதை என கூறப்படுகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில்,விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்கிறார்கள்.