தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தமிழ் திரையுலகில் அடையாளமாக காலந்தோறும் போற்றப்படும், கலைத்தாயின் மூத்த மகன் மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் சங்க வளாகத்தில் 01.10.2024 அன்று அவரது திருவுருவ படத்திற்கு, தலைவர் திரு.நாசர், துணைத்தலைவர் திரு.பூச்சி.S.முருகன், செயற்குழு உறுப்பினர்களான திரு.தளபதி தினேஷ், திரு.ஹேமச்சந்திரன் நியமன செயற்குழு உறுப்பினர்களான திருமதி.லலிதாகுமாரி, திரு.செளந்தரராஜா, திருமதி.சபிதா, திரு.அனந்தநாரயணன், திரு.ஆனந்த்.K.M.V சங்க மேலாளர் திரு.தாமராஜ் மற்றும் துணை மேலாளர் திரு.ரத்தினகுமார் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.