விஜய் நடிப்பில் உருவாக்கவுள்ள அவரது கடைசி படமான ’தளபதி 69’ படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இதையடுத்து இப்படத்தின் பூஜை நாளை நடக்க உள்ளதாகவும் அதை தொடர்ந்து நாளை மறு நாள் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளை மறுநாள் தொடங்கவுள்ள இப்படத்தின் முதல் க ட்ட படப்பிடிப்பு, இரண்டு வாரங்கள்தொடர்ச்சியாக நடைபெறும் எனவும், அதன் பின்னர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ மாநாடு முடிந்த பின்பு அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதன் முதற்கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி படமாக்க உள்ளதாகவும், இதற்காக சென்னையில் தனியார் ஸ்டுடியோ ஒன்றில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்ட பாடல் காட்சியில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்க உள்ளார்,இந்நிலையில் படத்தில் நடிகை மமிதா பைஜு நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது..