தமிழ்த்திரையுலகில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.தொடர்ந்து 2016ம் ஆண்டு ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.
இவர் நடிகரும் பிரபல தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார்.சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமான இவருக்கு தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வம் காட்டி வரும் ரம்யா பாண்டியன் அதில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் இந்நிலையில்,ரம்யாபாண்டியன் கடந்த வருடம் யோகா பயிற்சி பெற பெங்களூரில் உள்ள ‘வாழும் கலை ரவி சங்கர் ஆசிரமத்தின் யோகா பயிற்சி மையத்தில் இணைந்தார். அங்கே சர்வதேச யோகா மாஸ்டர் ஆக பணி யாற்றி வரும் பஞ்சாபை சேர்ந்த லோவெல் தவான் என்பவருடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர் இதையடுத்து இவர்களது திருமணம் வரும் நவம்பர் மாதம் 8 ம் தேதி ரிஷிகேசில் கங்கை நதியோரம் உள்ள கோயில் ஒன்றில் நடக்க உள்ளது. இவர்களின் திருமணத்துக்கு வாழும் கலை ரவிசங்கர் ஆசி வழங்கி உள்ளார். தற்போது ‘தேன்’ பட இயக்குனர் கணேஷின் இயக்கத்தில் முழுக்க முழுக்க கொடைகானலில் எடுத்துமுடிக்க பட்ட ஒரு படத்திலும், சுரேஷ்கிருஷ்ணா வின் மாறுபட்ட கதை அமசம் கொண்ட ஒரு படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.ரம்யாபாண்டியனின் திருமண வரவேற்பு சென்னையில் நவம்பர் 15 ம் தேதி நடக்கிறது.இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்