சென்னையில்,தயாரிப்பாளர் சங்க தேர்தல் வருகிற மார்ச் மாதம் 5ம் தேதி நடக்க உள்ளது, இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் விஷால் அணி சார்பாக பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.இதைத் தொடர்ந்து விஷால் பேசும்போது, ‘தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பதவியை உடனே ராஜினாமா செய்வோம். ராஜினாமா செய்வதற்காக கடிதத்தை இப்பொழுதே என்னிடம் எங்கள் அணியினர் கொடுத்து விட்டனர். நல்ல தயாரிப்பாளர்களால் தான் சினிமாவை சிறப்பான வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும். 2 ஆண்டுகளாக வெளியில் இருந்து குரல் கொடுத்தேன். ஏதும் நடக்க வில்லை. அதனால் தான் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறோம்’ என்றார்.இதன்பின் பிரகாஷ்ராஜ், பாண்டிராஜ், மிஷ்கின், கவுதம் மேனன், ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் பேசும்போது, தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெறும். நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கிறோம். திருட்டு வி.சி.டி. உள்ளிட்ட பல பிரச்சனை கண்டிப்பாக தீர்ப்போம்’ என்று கூறினர்.எந்தெந்த பிரிவில் யார் போட்டியிட இருக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு வரும் 8 ந்தேதி யன்றே தெரிய வரும்.