திருமண விவாகரத்துக்கு பின்னர் நடிப்பில் மிகவும் ஆர்வம் காட்டி வந்த நடிகை சமந்தா, மயோசிடி ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடர் அடுத்த மாதம் 7-ந் தேதி முன்னணி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், ‘தனக்கு மயோசிடிஸ் மட்டுமில்லாமல் ஞாபக மறதி நோயும் சேர்ந்து கொண்ட தாக’ ஊடகம் ஒன்றில் சமந்தா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமந்தா கூறியுள்ளதாவது,”‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்ற இந்த தொடரில் நடித்துக்கொண்டு இருக்கும் போது தான் எனக்கு மயோசிடிஸ் இருப்பது தெரியவந்தது. இது மட்டுமில்லாமல் ஞாபக மறதி நோயும் இதனுடன் சேர்ந்து கொண்டது. இதனால், படப்பிடிப்பில் என்ன நடக்கிறது என்பது கூட சமயத்தில் மறந்து போனது , சிலரின் பெயரைக்கூட என்னால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாமல் அவதிப்பட்டேன். யாரும் என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை, படப்பிடிப்பில் கூட யாரும் என்னிடம் நலன் விசாரிக்கவில்லை. இந்த நோய் ஏற்பட்டது முதல், இன்று வரை எல்லா டிரீட்மென்ட்டுக்கும் நானே தனியாகவே போய் வருகிறேன்.மயோசிடிஸ் நோய் இருந்தால், குழப்பம், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல் ஆகிவை இருக்கும் என்று கூறினார்கள், அவற்றுடன் தினமும் தனிமையில் அவதிப்பட்டு வருகிறேன்.மேலும், இந்த தொடரில் பல ஆக்சன் காட்சிகள் இருந்ததால், என்னால் அதை செய்ய முடியுமா என்று எனக்கு சந்தேகம் வந்தது இதனால், இந்த படத்தில் நடிக்க முடியாது என்று இயக்குனர் ராஜ் மற்றும் டிகே ஆகியோரிடம் கூறினேன். எனக்கு பதிலாக வேறு ஒரு நடிகைகளையும் பரிந்துரைத்தேன். ஆனால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை,என் மீது மட்டுமே அவர்கள் உறுதியாக இருந்ததால்,மிகவும் சிரமப்பட்டு இந்த ஆக்ஷன் காட்சிகளில் நடித்தேன் என கூறியுள்ளார் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும்,’ புகழின் உச்சியில் இருக்கும் சமந்தாவிற்கு இப்படி ஒரு நிலைமையா’ விரைவில் சமந்தா குணமடைய வேண்டும் என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.