ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் ரசிகர்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இயக்குனர் நெல்சன் திலீப் குமார், அடுத்தாக ஜெயிலர் 2 படத்தை இயக்கவிருக்கிறார். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.. இந்நிலையில் ஏற்கனவே ஜெயிலரில் கெஸ்ட் ரோலில் நடித்த நடிகர்களை ஜெயிலர் 2 படத்தில் அதிக காட்சிகளில் நடிக்க வைக்க நெல்சன் திட்டமிட்டிருப்பதாகவும்; மேலும் இப்படத்தில் நடிகர் தனுஷை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க முடிவு செய்து அதை ரஜினியிடம் சொல்ல; அதற்கு ரஜினியும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.ஜெயிலர் 2 பட பூஜைக்கு ஐஸ்வர்யாவை அழைக்கவும் நெல்சன் திட்டமிட்டுள்ளாராம்,