நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படம் மிக பிரம்மாண்ட படைப்பாக வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையை தொடர்ந்து மும்பை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் இப்படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சூர்யா பங்கேற்று வருகிறார். தற்போது சூர்யா மும்பையில் நடக்கும் பிரமோஷன்களில் அடுத்தடுத்து கலந்து கொண்டு வருகிறார் தற்போது டெல்லியில் நடக்கவுள்ள பிரமோஷன்களிலும் பங்கேற்ற சூர்யா,திஷா பதானி மற்றும் பாபி தியோல் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னதாக அங்கு கூடியிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு வரும் 26ம் தேதி சென்னையில் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.