கங்குவா பட இயக்குனர் ‘சிறுத்தை’ சிவாவின் சகோதரர், நடிகர் பாலா, இவர் தமிழில் “அன்பு’ “மஞ்சள் வெயில்,” “வீரம்,” “அண்ணாத்த” உள்பட சில படங்களிலும் பல மலையாள படங்களிலும் இந்நிலையில், ஏற்கனவே மூன்று திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பாலா, தற்போது தனது உறவினர் பெண் கோகிலா என்பவரை 4 வதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலா, “என் மனைவி கோகிலா எனது உறவினர் தான். இந்த திருமணத்தில் என்னுடைய அம்மாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன், ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த திருமணம் என் மனைவி கோகிலாவின் கனவை நிறைவேற்றும். அவருக்கு மலையாளம் தெரியாது இருந்தாலும், ஒரு வருடமாக எனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதில், அவரது பங்கு பெரும் அளவு இருந்தது. இந்த திருமண வாழ்க்கை நன்றாக செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, ஏனெனில் கோகிலா எனது உறவினர்,” என்று கூறியுள்ளார்.சமீபத்தில் பாலாவின் முன்னாள் மனைவி பாடகி அம்ருதா அளித்த புகாரின் அடிப்படையில் பாலா கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.