தென்னிந்திய திரையுலகில் ஆக்ஷன் நாயகனாக வலம் வரும் நடிகர் பிரபாஸ், முதல் முறையாக ஹாரர் -காமெடி ஜானரில், தி ராஜா சாப் என்ற படத்தில் நடிக்க உள்ளார் . இப்படத்தின் போஸ்டர் அவரது பிறந்தநாளில் வெளியாகியுள்ளது.2 நிமிட மோஷன் போஸ்டர் காட்டின் நடுவில் பியானோவில் ஒலிக்கும் “ஹேப்பி பர்த்டே” ட்யூனுடன் துவங்குகிறது. பின்னர், ஒரு மர்ம உருவம் காடுகளில் சுற்றித் திரிவதைப் பின் தொடர்ந்து, பார்வையாளர்களை விண்டேஜ் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறது, அங்கு இறுதியாக ராஜாவாக உடையணிந்து, சுருட்டுப் பிடித்தபடி, கறுப்பு உடையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பிரபாஸின் தோற்றம் இடம் பெற்றுள்ளது . இந்த போஸ்டரில் “ஹாரர் இஸ் தி நியூ ஹ்யூமர்” என்ற டேக்லைனும், அதைத் தொடர்ந்து “ஹேப்பி பர்த்டே, ரெபெல் சாப்” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.இப்படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இப்படத்தை இயக்குநர் மாருதி இயக்க, ‘பீப்பிள் மீடியா ஃபேக்டரி’ விஸ்வ பிரசாத் தயாரிக்கிறார், தமன் எஸ் இசையமைக்கிறார்.பான் இந்திய படமாக உருவாகும் இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் அடுத்த ஆண்டு,ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது