ஸ்ரீ மாணிக்கம்மன் வெஞ்சர்ஸ் பட நிறுவனம் சார்பில், சி என் குமார் தயாரித்துள்ள புதிய படம், ‘தி ஸ்டீலர்’. இப்படத்தில் கோபிநாத் சங்கர், விக்னேஷ் செல்லப்பன், சிவாஸ் கே. எம், பொன்னி சுரேஷ், ஹர்ஷிதா, சதீஷ்குமார். பி, சீனிவாஸ் கணேஷ், மதன் சர்மா, கார்த்திகேயன் சுந்தரேசன், அபிஷேக் தங்கமணி, பாலாஜி ஸ்ரீ ராம், கிருபா மோல் தாமஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள புதுமுக இயக்குனர் ஜெகதீஷ் கண்ணா கூறியதாவது, “ஒரு ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தனது அலுவலகத்தில் இருந்து மிக ரகசியமான தகவல்களை கொண்ட மடிக்கணினி காணாமல் போன வழக்கை விசாரிக்கிறார். 9 ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதன் முடிவில். ஆச்சரியமான திருப்பத்துடன் படம் முடிவடைகிறது. முற்றிலும் புது முகங்கள் நடித்து உருவாகியுள்ள இப்படம் இதுவரை 14 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி 8 விருதுகளை வாங்கி குவித்துள்ளது. இதில் பாகிஸ்தான், இத்தாலி, ஜார்ஜியா, மோல்டோவா, ரோம் நாட்டு திரைப்பட விழாக்களும் அடக்கம். இப்படம் என் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து ‘ரோஷாமன் விளைவு’ மற்றும் ஹீரோஸ் ஜேர்னி கான்செப்ட், திரைக்கதை அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் ஐடி ஊழியர்களின் எண்ண ஓட்டங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. சிறிய பட்ஜெட்டில் வித்தியாசமாகவும் உலகத்தரமாகவும் அதேசமயம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படாமலும் ஒரு படம் செய்து காட்ட, எங்களின் ஒரு சிறு முயற்சி தான் ‘தி ஸ்டீலர்’. இப்படத்திற்கு தற்போது உலகளாவிய அங்கீகாரம் கிடைத்து வருவது பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இப்படத்தின் ஒளிப்பதிவை சிவானந்தா காந்தி கவனிக்க, அருள் டோனி ,பிஜோர்ன் சுராவ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.