இயக்குனர் நடிகர் செல்வராகவன் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வப்போது அதில் தனது கருத்துக்களை (தத்துவ மழை?) பதிவிட்டு வருகிறார். இப்பதிவுகள் அவரது ரசிகர்களால் வைரலாகியும் வருகிறது. இந்நிலையில், மன அழுத்தம் காரணமாக 7 முறை தற்கொலைக்கு முயன்றதாக அவர் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செல்வராகவன் கூறியுள்ளதாவது,
“இந்த உலகத்துல வாழ்கிற அனைவருக்கும் இந்த இரண்டுவிதமான அனுபவத்தை அனுபவித்தவர்களாக இருப்பார்கள் ஒன்று. தற்கொலை முயற்சி, இன்னொன்று டிப்ரஷன். இது மாதிரி நானும் அனுபவித்து இருக்கிறேன். நான் ஒருமுறை அல்ல ஏழு முறை தற்கொலைக்கு முயற்சி செய்து இருக்கிறேன். ஆனால் இப்பொழுது அல்ல, சில வருடங்களுக்கு முன்பு. ஒவ்வொரு தற்கொலைக்கு முயற்சி செய்யும் போதும், மனசுக்குள் ஒரு குரல் கேட்கும், ஏதோ சொல்ற மாதிரி, ஏதோ கேக்குற மாதிரி ஒரு உணர்வு இருக்கும். 10 நாள் கழித்தோ அல்லது ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழித்துக் கூட வாழ்க்கை திடீரென மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் நாம ஆசைபட்டது போல மாறலாம். அப்போது, தற்கொலை செய்து கொண்டிருந்தால் எல்லாமே போயிருக்குமே என்று நான் நினைப்பேன்.வாழ்க்கையே அதுதான். தற்கொலை செய்ய முயற்சி செய்து வாழ்க்கை முடித்துக்கொள்ள நினைப்பவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்றால், அடுத்த ஜென்மத்திலாவது நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் எனும் நம்பிக்கையே. சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு குடியிருப்பில் சந்தோஷமாக பிறந்து வாழ வேண்டும் என்று நினைப்போம்; ஆனால், கூவத்தில் பிறந்த பன்னியாகவோ, காட்டில் மரத்தில் தொங்கும் பேயாகவும் இருந்தால் யாரால் என்ன செய்ய முடியும்.நமக்கு கேட்கும் அந்த குரல் கடவுளின் குரலாகவோ அல்லது வேறு யாரின் குரலாகவோ இருக்கலாம். என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லுங்கள், ஆனால் அந்த குரல் கேட்காமல் இருக்காது. இது உண்மையானது இவ்வாறு அதில் கூறியுள்ளார் தற்போது அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது.