நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியல் களத்தில் செயல்படப்போவதாக கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தினை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி அறித்தார். கட்சி அறிவித்து கிட்டத்தட்ட 9 மாதங்களில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினையும் நடத்தி அரசியல் களத்தில் திமுகவும் பாஜகவும் எதிரிகள் என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்
இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் விஜய்யின் பேச்சு குறித்து மிகவும் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில் , “ யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும் .. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்..” என குறிப்பிட்டுள்ளார்.இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.