தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. தேவி படப்பிடிப்பின் போது இவருக்கும் பிரபுதேவாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கை காதலித்து வருவதாக இந்தி மீடியாக்களில் செய்தி வைரலாகி வருகிறது.ஆனால் இது வெறும் வதந்தி தான் என்கிறது தமன்னா தரப்பு !