இந்த செய்தி யாரையும் எதிர்த்தோ,ஆதரித்தோ எழுதப்பட்டதல்ல . இந்திய ஒருமைப் பாட்டுக்கு எந்த சக்தி இடையூறாக இருந்தாலும் கடுமையாக கண்டிக்கப்படவேண்டும் என்கிற உணர்வுடன் பதிவு செய்யப்படுகிறது.
கேரளத்தில் இருக்கிற திருப்புனித்தீரா பூர்ணதிரேயாயுச ஆலயத்தில் மலையாள திரைப்பட இசை அமைப்பாளர் சுஷின் ஷியாம் திருமண நிகழ்வு நடந்திருக்கிறது.
அந்த மணவிழாவில் உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிரபல திரைப்பட நடிகர் பகத் பாசில் மனைவி நஜ்ரியா நசீமுடன் கோவிலுக்கு வந்திருக்கிறார்.
அதுதான் தற்போது பிரச்சனையை கிளப்பியிருக்கிறது. கேரளத்தில் இருக்கிற வம்படி வக்கீல் ஒருவர் “இது இந்து தேசம் . சிறுபான்மை இனத்தவர் எங்களின் உணர்வை இழிவு படுத்தினால் கடுமையான முடிவை எதிர்நோக்க வேண்டியதாக இருக்கும் ” எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
யானைக்கு மதம் பிடிக்கப்போகிறது. !












