தமிழ்த்திரையுலகில் கடந்த 2018-ல் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து ‘சொல்லிவிடவா’ படத்தை இயக்கிய நடிகர் அர்ஜுன். தற்போது 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ளார் . இப்படத்துக்கு ‘சீதா பயணம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படம் குடும்ப உறவுகள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களின், மறக்கமுடியாத பயணத்தை உறுதியளிக்கும், அழகான திரைப்படமாக உருவாகி வருகிறது சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அர்ஜுன் மகள் நடிகை ஐஸ்வர்யா இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்முதன்மை கதாபாத்திரங்களான (ஐஸ்வர்யா – நிரஞ்சன்) அபி மற்றும் சீதா இருவரும் காரில் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் தமிழ்-தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.