நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதிதிருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் தனுஷ் நடிகர் இயக்குனராக பயணித்து வருகிறார். ஐஸ்வர்யாவும் சில படங்களை இயக்கியும் உள்ளார் இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு திடீரென இவர்கள் இருவரும் பிரிந்து விடப் போவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டு, பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தனர் . இதையடுத்து இருவரின் குடும்பத்தினர் மற்றும் இரு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட சிலரும் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளை களைய சமரச பேச்சு வார்த்தை மேற்கொண்டு வந்தனர். ஆனால்
இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்நிலையில் தனுஷ் -ஐஸவர்யா தம்பதியின் மூத்த மகன் யாத்ரா, அவரது பள்ளியில் விளையாட்டுக் குழு கேப்டனாக பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது இந்நிகழ்வில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டனர். சமூக வலைதளங்களில் தீயாக பரவிய இப்புகைப்படங்களை பார்த்த பலரும் விரைவில் இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து விடுவார்கள் என்று பேசி வந்தனர். இந்நிகழவி அவர்களது இரு குடும்பத்தினரிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே இருவரையும் அழைத்து ரஜினிகாந்த் நடத்திய பேச்சு வார்த்தையில் இருவரும் கருத்து வேறுபாடுகளை களைந்து மகன்களின் எதிர்காலத்தையும் ரஜினியின் உடல் நிலையையும் கருத்தில் கொண்டு மனம் விட்டு பேசி சமரசம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ரஜினிகாந்தின் திரையுலக 50 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,
இந்த வழக்கின் விசாரணை சென்னை குடும்ப நல கோர்ட்டில் கடந்த அக்டோபர் 7ந் தேதி விசரணைக்கு வந்தது. அப்போது இருவரும் ஆஜராகாதால், வழக்கு விசாரணை அக்டோபர் 19ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் இருவரும் இரண்டாவது முறையாகவும் ஆஜராகாததால், இவ்வழக்கு மீண்டும் நவம்பர் 2ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அன்றும், மூன்றாவது முறையாக தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில் மொத்தம் மூன்று முறை விவாகரத்து வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆஜராகவில்லை என்பதால் நிச்சயம் அவர்கள் இணைவது உறுதிதான் என்கிறது இருவரின் நெருங்கிய தரப்பு. இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 31 ம் தேதி தீபாவளி பண்டிகை தினத்தில் ரஜினிகாந்தின் வீட்டில் தனுஷும், ஐஸ்வர்யாவும் சந்தித்துக்கொண்டதாகவும், அப்போது தனுஷிடம் ரஜினிகாந்த் மனம் விட்டு பேசியதாகவும் சொல்லப்படுகிறது.மேலும் தனுஷும் தனது தரப்பு விஷயங்களை சொல்லிவிட்டு, அருகில் நின்ற ஐஸ்வர்யாவை ரஜினி காலில் விழுந்து இருவரும் ஆசி பெற்றதுடன், அன்று தனுஷும் – ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடியதாகவும் போயஸ் கார்டன் வட்டாரம் தெரிவிக்கிறது.