‘கோட்’ படத்தை தொடர்நது நடிகர் விஜய் தனது கடைசி படமான ‘தளபதி 69’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை எச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், ப்ரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது . ஒருபக்கம் அரசியல், மறுபக்கம் நடிப்பு என செம பிசியாக தன்னை மாற்றிக்கொண்டுள்ள விஜய், தற்போது ‘தளபதி 69’ படப்பிடிப்பில் மும்முரமாகியுள்ளார் .இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட நாட்களுக்கு முன்னதாகவே முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டு தற்போது எச். வினோத், ‘தளபதி 69’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் . இதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே, பாபி தியோல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ‘தளபதி 69’ படத்திலிருந்து முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதாக இருந்த நடிகர் சத்யராஜ் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக சத்யராஜ் இப்படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டாலும்,படத்தில் சர்ச்சைக்குள்ளாகும் வசனங்கள் மற்றும் கதாபாத்திரம் சத்யராஜுக்கு கொடுக்கப்பட்டதாலேயே, உஷாரான சத்யராஜ், இயக்குனரிடம் ஒருவருக்காக பலரையும் பகைத்து கொள்ள எனக்கு விருப்பமில்லை என அப்படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.