சின்னத் திரையின் ஆதிக்கம் சினிமாவையே பின்னுக்குத் தள்ளிவிட்டது என்று சொன்னாலும் பிழையில்லை . கடைக்கோடி கிராமத்தில் உள்ள குடிசையிலும் டி. வி. யின் ஆளுமையை பார்க்கலாம்.
உலகச்செய்திகள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தப்படுவது சின்னத் திரையில் தான்.!
காலையில் தொடங்கி 24 மணிநேரமும் சின்னத்திரையில் பல பல சேதிகள். நாடகங்கள் என உலகம் உருண்டு கொண்டு வருகிறது,
தமிழகத்தில் எத்தனையோ டி. வி நிலையங்கள் . அத்தனையிலும் நாடகங்கள் முதன்மை இடத்தில். சீரியல்கள் பலவிதம். என்றாலும் அத்தனையும் ஒரே மாதிரியான பாணியில். ஒரு சீரியலில் அங்கபிரதட்சணம் வந்தால் மற்ற சீரியல்களிலும் அதே மாதிரியான சீன்கள் வருகின்றன. சீனுக்காகவே வசனங்கள் எழுதப்படுகின்றன. இயல்பான உரையாடலை கேட்கவே முடியாது.
இன்னொருத்தியின் புருஷனை லாவிக்கொண்டு போகிற கருத்துகள் இல்லாத சீரியலை பார்க்க முடியாது. பெண்களை இழிவுபடுத்துகிற காட்சிகளை குடும்ப பெண்களே ரசிக்கிற அவலம் இங்கு உண்டு.
இருந்தாலும் சீரியல்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கின்றன . ஆகவே நாமும் இனி தொடர்ந்து சின்னத்திரை செய்திகளை காணலாம்.சின்னத் திரையின் ஆதிக்கம் சினிமாவையே பின்னுக்குத் தள்ளிவிட்டது என்று சொன்னாலும் பிழையில்லை . கடைக்கோடி கிராமத்தில் உள்ள குடிசையிலும் டி. வி. யின் ஆளுமையை பார்க்கலாம்.
உலகச்செய்திகள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தப்படுவது சின்னத் திரையில் தான்.!
காலையில் தொடங்கி 24 மணிநேரமும் சின்னத்திரையில் பல பல சேதிகள். நாடகங்கள் என உலகம் உருண்டு கொண்டு வருகிறது,
தமிழகத்தில் எத்தனையோ டி. வி நிலையங்கள் . அத்தனையிலும் நாடகங்கள் முதன்மை இடத்தில். சீரியல்கள் பலவிதம். என்றாலும் அத்தனையும் ஒரே மாதிரியான பாணியில். ஒரு சீரியலில் அங்கபிரதட்சணம் வந்தால் மற்ற சீரியல்களிலும் அதே மாதிரியான சீன்கள் வருகின்றன. சீனுக்காகவே வசனங்கள் எழுதப்படுகின்றன. இயல்பான உரையாடலை கேட்கவே முடியாது.
இன்னொருத்தியின் புருஷனை லாவிக்கொண்டு போகிற கருத்துகள் இல்லாத சீரியலை பார்க்க முடியாது. பெண்களை இழிவுபடுத்துகிற காட்சிகளை குடும்ப பெண்களே ரசிக்கிற அவலம் இங்கு உண்டு.
இருந்தாலும் சீரியல்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கின்றன . ஆகவே நாமும் இனி தொடர்ந்து சின்னத்திரை செய்திகளை காணலாம்.
ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் “காதம்பரி” .
இத்தொடரில் 200 ஆண்டு கால சாபத்தின் விளைவாக காத்தாள்புரம் கிராமத்தில் 10 வயது தாண்டினாலே ஆண் குழந்தைகள் இறந்து விடுகின்றன. . இந்த விஷயத்தை அக்கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு தெரியப்படுத்துகிறார். அதன் பின் அத்தொலைக்காட்சி நிறுவனம் தங்கள் படக்குழுவை அக்கிராமத்திற்கு அனுப்புகிறது.
பெரியவர் கிராமத்தின் வரலாறு பற்றிய புத்தகம் ஒன்றை அவர்களுக்கு படிக்க கொடுக்கிறார். அந்த புத்தகத்தை வாசிக்க வாசிக்க அக்கிராமத்தைப் பற்றிய மர்மங்கள் ஒவ்வொன்றாக வெளி வருகிறது. இறுதியில் அந்த கிராமத்தின் மீது இருந்த சாபம் என்ன? அந்த சாபம் விலகியதா! என்பதனை முன் ஜென்மம் மறு ஜென்மம் என்று இணைக்கும் திகிலான கதைக்களத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மிதுனா, சுதா சந்திரன், லட்சுமிராஜ், காயத்ரி ,பாலாஜி, செம்புலிஜெகன், சுந்தரி, சூரி, தேசிங்கு உட்பட பலர் நடித்துள்ளனர்.