சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடித்த முதல் படமான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் படப்பிடிப்பின் போதே இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு விட, சில வருட காத்திருப்புக்கு பின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு தற்போது தியா என்ற மகளும்,தேவ் என்ற மகனும் உள்ளனர் திருமணத்திற்கு பின்னர் ஜோதிகா தேர்ந்தெடுத்த சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில்
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ விரைவில் வெளியாக உள்ளது இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா பேசுகையில்,”ஜோதிகாவுடன் நான் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருக்கிறது. அப்படி நடக்க நான் விரும்புகிறேன். மேலும் அது விரைவில் நடக்கும் என்றும் நம்புகிறேன்.என்னையும், ஜோதிகாவையும் வைத்து படம் இயக்க வேண்டும் என்று எந்த இயக்குநரையும் நாங்கள் இருவரையும் கேட்க விரும்பவில்லை. மாறாக அது தானாகவே நடக்க வேண்டும். ஏதோ ஒரு இயக்குநர் நாங்கள் இணைந்து நடிக்கும்படியான பொருத்தமான கதையை எங்களிடம் வந்து சொல்ல வேண்டும். அதை இந்த பிரபஞ்சம் நடத்தி வைக்கும் என்று நம்புகிறேன்” என பேசியுள்ளார்.