தமிழ்,நடிகை ரம்யா பாண்டியன் ‘ஜோக்கர்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து . ‘டம்மி பட்டாசு’, சமுத்திரக்கனியின் ‘ஆண் தேவதை’, மம்முட்டியுடன் மாலைநேரத்து மயக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சின்னத்திரையில் குக் வித் கோமாளி சீசன் 1, பிக்பாஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது. இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு ரவி ஷங்கர் ஆசிரமத்தில் யோகா பயிற்சி மையத்தில் ரம்யா பாண்டியன் சேர்ந்தார். இந்த ஆசிரமத்தில் அவரது பயிற்சியாளரான் லொவல் தவானுடன் ஏற்பட்ட நட்பு காதலானது. இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன்,யோகா மாஸ்டர் லவல் தவான் ஆகியோரது திருமணம் இன்று காலை 10.15 மணியளவில் ரிஷிகேஷ் அருகேயுள்ள கங்கை நதியோரம் சிவபுரி என்ற இடத்தில் நடந்தது . தமிழ் முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் நடிகர்கள் அருண் பாண்டியன், அசோக் செல்வன், நடிகை கீர்த்திபாண்டியன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்