தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி..பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து “லிட்டில் சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்தையும் பெற்றவர் சிலம்பரசன் TR.. அதனைத் தொடர்ந்து கதாநாயகனாக அறிமுகமாகி, நட்சத்திர நடிகராகவும் உயர்ந்தார்.. இன்று பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகராக முன்னேறி இருக்கும் சிலம்பரசனின் கலை உலக பயணம் நாற்பதாம் ஆண்டை நிறைவு செய்து..தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறார்..
இவருடைய கலை பயணத்தில் குழந்தை நட்சத்திரம் – இளம் கதாநாயகன் – பாடகர் – பாடலாசிரியர் – கதாசிரியர் – திரைக்கதை ஆசிரியர் – இயக்குநர் – இசையமைப்பாளர் – பின்னணி பாடகர் – என திரையுலகத்தின் அனைத்து துறைகளிலும் தன் திறமையை நிரூபித்து, ‘தந்தை எட்டடி பாய்ந்தால் தமையன் பதினாறு அடி பாய்வார் ‘ என்ற பழமொழியை நிரூபித்து, இன்றுவரை பன்முக ஆளுமை திறன் கொண்ட கலைஞராக திரையுலகில் வலம் வருகிறார்.
நாற்பது ஆண்டு கால திரையுலக பயணத்தில் ஏற்றங்களையும், இறக்கங்களையும் சந்தித்த சிலம்பரசன்- ரசிகர்களின் அன்பை சம்பாதிப்பதில் இன்று வரை ஏறுமுகமாகவே இருக்கிறார். அவரின் பயணத்தை விவரித்தால் சீன பெருஞ்சுவர் போல் நீண்டு கொண்டே இருக்கும் என்பதால்..சுருக்கமாக காண்போம்.
1984 ஆம் ஆண்டில் ‘உறவை காத்த கிளி’ எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்.
1989 ஆம் ஆண்டில் வெளியான ‘சம்சார சங்கீதம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஐ எம் எ லிட்டில் ஸ்டார் ‘ என்ற பாடலில் பாடகராக அறிமுகம்.
2002 ஆம் ஆண்டில் ‘காதல் அழிவதில்லை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம்.
2003 ஆம் ஆண்டில் ‘தம்’ எனும் திரைப்படத்தில் இசையமைப்பாளர் தேவா இசையில் வெளியான ‘அட்ரா அட்ரா தம்’ என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகம்.
2004 ஆம் ஆண்டில் ‘மன்மதன்’ என்ற படத்தின் மூலம் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்ததுடன், அப்படத்தின் திரைக்கதையும் எழுதி, திரைக்கதை ஆசிரியராகவும் அறிமுகம்.
2006ம் ஆண்டில் வெளியான ‘வல்லவன்’ படத்தின் மூலம் திரைக்கதை மட்டும் எழுதாமல் அப்படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகம்.
‘மன்மதன்’, ‘வல்லவன்’ , ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என ஏராளமான திரைப்படங்களில் நடித்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று… தமிழ் திரையுலகின் எவர்கீரின் கிளாசிக்கலான படைப்புகளை வழங்கிய நட்சத்திர நடிகராகவும் உயர்ந்தவர்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பாடல்களை பாடி தனக்கென தனி இசை ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர்.
திரையுலகில் நட்புக்காக கௌரவ வேடத்தில் நடிப்பதிலும் வல்லவர் சிலம்பரசன். ‘காதல் வைரஸ்’, ‘கோவா’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘இங்க என்ன சொல்லுது’, ‘காக்கா முட்டை’, ‘காற்றின் மொழி’, ’90 எம் எல்’ ,’ மகா’ என ஏராளமான படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அப்படத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தவர்.
தொலைக்காட்சி ரியாலிட்டி டான்ஸ் ஷோஸ்களில் நடுவர் என தொடங்கி பிக் பாஸ் தொகுப்பாளர் என தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.கௌதம் மேனன் இயக்கிய ‘கார்த்திக் டயல் செய்த எண்’ எனும் குறும்படத்திலும் சிலம்பரசன் நடித்திருக்கிறார்.
‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ என தொடர்ந்து ஹாட்ரிக் கமர்சியல் வெற்றியை அளித்த சிலம்பரசன்… தற்போது ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்- மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் நடிக்கிறார்..இதனைத் தொடர்ந்து இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட சரித்திர பின்னணியில் பெயரிடப்படாத திரைப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
இவருடைய பயணம் வாரிசு நடிகர் என்ற அடையாளத்துடன் தொடங்கினாலும்… தன்னுடைய தனித்துவமான திறமையாலும், அசராத கடும் உழைப்பினாலும், திரைத்துறையில் நட்சத்திர நடிகராக மட்டுமல்லாமல் முத்திரை பதித்த இயக்குநராகவும்.. படைப்பாளியாகவும் வலம் வரும் சிலம்பரசனின் திரைப்பயணம்… தொடர்ந்து சர்வதேச விருதுகளுடன் வெற்றிகரமாக தொடர வேண்டும் என வாழ்த்துவோம்.
தமிழ் திரையுலகில் நட்சத்திரங்களுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் இடையேயான அன்பு என்பது விசேஷமானது. ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’, ‘யங் சூப்பர் ஸ்டார்’, ‘STR’ என ரசிகர்கள் சிலம்பரசனை பாராட்டி அளித்த பட்டங்கள் இன்றும் என்றும் சிரஞ்சீவியானவை. ரசிகர்களின் அன்பிற்காகவே தொடர்ந்து இயங்கி வரும் நட்சத்திர நடிகர்களில் ‘ஆத்மன்’ சிலம்பரசன் TR மட்டுமே முன்னணியில் இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.