தமிழக முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு அனேகமாக இன்று இரவுக்குள் அவருக்கு ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை கிடைத்துவிடும் என்றே கூறப்படுகிறது.அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்,மற்றும் பொன்னையன் உள்ளிட்ட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சற்று முன்னர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரு, முன்னாள் நடிகர் சங்க தலைவரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் முதல்வருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.