மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலில் தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாட இருக்கிறார். பிளாக்பஸ்டர் படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ஸின் தொடர்ச்சியான ‘புஷ்பா2: தி ரூல்’ படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் அல்லு அர்ஜுன் சந்தன கடத்தல்காரர் புஷ்பா ராஜாகவும் மற்றும் அவரது மனைவியாக நடிகை ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதில் நடிகை ஸ்ரீலீலா சிறப்புப் பாடலுக்கு நடனமாட இருக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அதிகமாக்கியுள்ளது.
‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ அண்டாவா’ பாடல் உலகளவில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாக மாறியுள்ளது. இப்போது, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தென்னிந்தியாவின் நடன ராணியான ஸ்ரீலீலாவுடன் இணைந்து மீண்டும் ஒரு ஹிட் பாடலைக் கொடுக்க உள்ளார். இந்த ஆண்டின் மிகப்பெரிய படத்தில் ஒரு சிறப்புப் பாடலுக்கு நடனமாட ஸ்ரீலீலா பொருத்தமானவர். மேலும், டிரெய்லர் அறிவிப்பு விரைவில் வரவிருக்கும் நிலையில், சிறப்புப் பாடல் குறித்த இந்த லேட்டஸ்ட் அப்டேட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா கோரியோகிராஃப் செய்துள்ளார்.
சமீபத்திய படங்களில் தனது திறமையான நடிப்பு மற்றும் நடனத்தால் கவனம் ஈர்த்து வரும் ஸ்ரீலீலா ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் நடனமாட இருப்பது படத்தின் சிறப்பம்சமாக இருக்கும்.
‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் உலகம் முழுவதும் டிசம்பர் 5, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்தின் இசை உரிமையை டி சீரிஸ் கைப்பற்றியுள்ளது.