அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.இப்படத்தில்அல்லு அர்ஜுனுடன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இதில், அல்லு அர்ஜுன் சந்தன கடத்தல்காரர் புஷ்பா ராஜாகவும், ராஷ்மிகா மந்தனா, புஷ்பா ராஜாவின் மனைவி ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.’புஷ்பா’ முதல் பாகத்தில் ‘சமந்தா’ கவர்ச்சியாக ஆட்டம் போட்ட ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் சமந்தா இல்லாத நிலையில், அவருக்கு பதில் ஆடப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.அந்த குறையை நடிகை ஸ்ரீலீலா தான் தீர்த்து வைத்திருக்கிறார். நடிகை ஸ்ரீலீலா புஷ்பா 2ல் கவர்ச்சியில் பெரும் புரட்சியே படைக்கும் அளவுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கிறாராம்.இந்த பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா கோரியோகிராஃப் செய்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ஸ்ரீலீலாவின் சிறப்புப் பாடல் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.