‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா இரட்டை வேட நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தில் ,திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் உள்ளதாக சூர்யா தொடர்ந்து கூறி வருகிறார். கங்குவா படத்தில், ‘அப்படி என்ன ரகசியம் உள்ளது’ என ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் நிலையில், படத்தின் இரண்டாவது டிரெய்லரில் அந்த ரகசியம் வெளியானதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தற்போது வெளியாகியுள்ள டிரைலரில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றை பதிவிட்டு வருகின்றனர்.அதாவது படத்தில் நடிகர் கார்த்தியும் உள்ளதாகவும், இது கார்த்திதான் என அக்காட்சியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.அந்த புகைப்படத்தில் கார்த்தி போன்ற தோற்றத்தில் உள்ளவர் காவி நிற பற்களுடன் வருவது போல உள்ளது.
இப்படத்தின் முதன்மை கதாபாத்திரமான கங்குவா , கடந்த காலத்தில் வரும் சூர்யாவின் பெயர், அதேபோல் பிரான்சிஸ் என்பது நிகழ்காலத்தில் வரும் சூர்யாவின் பெயர். இதில் பிரான்சிஸ் கேரக்டர் படத்தில் வெறும் அரை மணி நேரம் தான் வரும்.என்கிறார்கள் எஞ்சியுள்ள 2 மணிநேரமும் வரலாற்று காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.