நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மனைவி மகேஸ்வரி கடந்த நான்கு வருடங்களாக ‘கோமா’ நிலையில் இருப்பதாக, மகள் திவ்யா சத்யராஜ் உருக்கமாக தெரிவித்து இருக்கிறார்.”என் அம்மா (மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால்) கடந்த 4 வருடங்களாக கோமாவில் இருக்கிறார். அவர் வீட்டில் தான் இருக்கிறார். ‘பெக்’ டியூப் வழியாக தான் உணவு கொடுக்கிறோம். நாங்கள் மொத்தமாக உடைந்துவிட்டோம், ஆனாலும் நம்பிக்கையாக அவர் குணமடைவார் என காத்திருக்கிறோம்.””அம்மா திரும்ப கிடைப்பார் என எங்களுக்கு தெரியும். அப்பா கடந்த 4 வருடங்களாக single parent ஆக இருக்கிறார். அப்பாவின் அம்மா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார், நானும் அவருக்கு ஒரு single mom ஆக இருக்கிறேன். அப்பாவும், நானும் ‘பவர்புல் சிங்கிள் மாம்ஸ்’ கிளப்பில் இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார். இப்பதிவு திரையுலகினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.