தன்னுடைய காணிக்கையாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் விரும்பி ‘உலகநாயகன் ‘என்கிற பட்டத்தை வழங்கினார் . தன்னை தயாரிப்பாளராக உயர்த்தியவர் கமல்ஹாசன் என்கிற நன்றி பெருக்கு ! அந்த பட்டத்துக்கு சிறப்பு சேர்ந்தது, கமல்ஹாசன் ஏற்றுக் கொண்டதால்.!
உலகளாவிய கமலின் ரசிகர்கள் பெருமையுடன் உலகநாயகன் என்று அழைத்தார்கள். அண்மையில் வெளியான பாக்ஸ் ஆபீஸ் படமான ‘அமரன் ‘படத்தில் அந்த சிறப்புப் பெயருடன்தான் டைட்டில் வெளிவந்திருக்கிறது.
இப்படி மக்களால் நன்கு அறியப்பட்ட பெயரை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டு கமல்ஹாசன் நெடிய அறிக்கை விடுமளவுக்கு என்ன நடந்தது?மக்கள் நீதி மய்யத் தலைவரை நோகடித்தவர்கள் யாராக இருக்கக்கூடும்?
எத்தனை விருதுகள் கொடுத்தாலும் அத்தனைக்கும் தகுதியான ஒரே தமிழ் நடிகர் கமல்ஹாசன் என்பதை யாரும் மறந்து விடவில்லை.. தொடர்ந்து தனக்கு விருதுகள் வழங்குவதை தவிர்த்து ஏனைய நடிகர்களுக்கு கொடுத்துவிடுங்கள் என பாலிவுட் பத்திரிகையான ‘பிலிம் பேர் ‘நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்தவர் கமல். அவர்களும் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவ்வாறே தவிர்த்தனர். கமல்ஹாசனின் பெருந்தன்மை. திரை உலகம் மீது வைத்திருந்த காதல்.
அத்தகைய நல்லவர் இப்போது ‘உலகநாயகனை ‘ ஒதுக்குவது ஏன் ?
காரணம், இயக்குநர் ஷங்கர் என்பதாக திரை உலகம் கிசு கிசுக்கிறது.
இந்தியன் 3 படம் தொடர்பாக சில மாற்றங்களை கமல்ஹாசன் சொன்னது ஷங்கருக்குப் பிடிக்கவில்லையாம். இதன் விளைவாக ‘கேம் சேஞ்சர் ‘ பட நாயகனுக்கு ‘குளோபல் ஸ்டார் ‘என்கிற சிறப்புப் பெயரை வலிந்து திணித்திருக்கிறார் ஷங்கர் என்கிறார்கள் . படத்தின் நாயகன் ராம்சரண். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் . பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு அண்ணன் மகன்.
இதனால் தந்தையின் மெகா , சித்தப்பாவின் பவர், இரண்டையும் இணைத்து தன்னை ‘மெகா பவர் ஸ்டார் ‘என்பதாக அறிவித்துக் கொண்டவர்தான் ராம் சரண். அவரது ரசிகர்கள் இந்த பெயராலேயே அழைத்தனர். பட புரமோஷன்களிலும் ‘மெகா பவர் ஸ்டார்’ என்றே ஒளிர்ந்தது.
ஒரு தடவை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஆந்திர சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிற மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் என்கிற படத்தை கொடுத்தார். அந்த படத்தின் தமிழ்ப் பதிப்பின் விளம்பரத்தில் ‘சூப்பர் ஸ்டார் ‘ என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பினார் . உதவியாளர்கள் தலையிட்டு தவிர்த்தனர் ,மகேஷ் பாபு வும் அதை விரும்பவில்லை என்பது கூடுதல் செய்தி.
சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினியை மட்டுமே குறிக்கும் என்பதை மகேஷ் பாபு நன்கு அறிந்தவர். இவருக்கு இருந்த உணர்வு ராம் சரணிடமும் இருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது.
குளோபல் ஸ்டார் உதயம் என்பது ஷங்கரின் உத்தி என்பதாக ஆந்திர பத்திரிக்கையாளர்கள் கருதுவதற்கு இயக்குநரும் மெகா பவர் ஸ்டாரும் தான் பதில் சொல்ல வேண்டும்.
–தேவிமணி