நடிகர் நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பின்னர் மயோசிடிஸ் நோய் காரணமாக நடிப்புக்கு தற்காலிக முழுக்கு போட்டு, தொடர் சிகிச்சை மேற்கொண்ட சமந்தா, அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். இதைடுத்து அவர் நடித்த சாகுந்தலம், குஷி படங்கள் தோல்வியடைந்தன. தொடர்ந்து மீண்டும் குட்டி பிரேக் எடுத்தவர் தற்போது அனைத்து பிரச்னைகளையும் கடந்து சமந்தா தற்போது மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார் . அவரது நடிப்பில் கடைசியாக ‘சிட்டாடல் வெப் சீரிஸ்’ வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சமந்தா ஊடகம் ஒன்றில் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதில்,“நான் தாய்மை அடைவது மிகவும் தாமதமாகிவிட்டது என்று நான் நினைக்கவில்லை. எனக்கு ஒரு தாயாக வேண்டும் என்ற கனவுகள் இன்னமும் இருக்கின்றன. நிச்சயமாக ஒரு தாயாக இருக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன். அது ஒரு அழகான அனுபவம். அதைத்தான் நான் எதிர்பார்த்திருக்கிறேன்.மக்கள் பெரும்பாலும் எனது வயதை பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால் தாயாக இருக்க முடியாத நேரம் என்று வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்று நான் நினைக்கிறேன்” என கூறியுள்ளார் முன்னதாக சமந்தா தனது ட்விட்டர் உரையாடலில் , ‘எனக்கு இரண்டாவது திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை.முதல் திருமணத்தைவிடவும் இரண்டாவது திருமண விவாகரத்துகள்தான் அதிகம் என்று புள்ளிவிவரம் இருக்கிறது’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.