மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லாலுக்கு பிரணவ் என்கிற மகனும், விஷ்மயா என்கிற மகளும் உள்ளனர். இதில் மூத்தவரான பிரணவ் தந்தை வழியை பின்பற்றி மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ள போதிலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படத்தில் நடித்தால் போதும் என்ற முடிவுடன் நடித்து வருகிறார்.
தான் ஒரு பெரிய நடிகரின் மகன். தானும் ஒரு பிரபல நடிகர் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாத பிரணவ், அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தன்னந்தனியாக உலகை சுற்றி வரும் பிரணவ், தற்போது ஸ்பெயினில் உள்ளாராம்.
இது குறித்து பிரணவ்வின் ,அம்மா சுசித்ரா மோகன்லால் கூறுகையில்,”என் மகன் அப்பு ஸ்பெயினில் இருக்கிறார். அங்கிருக்கும் பண்ணை ஒன்றில் ஆடு மேய்த்து வருகிறார். அதற்கு சம்பளம் கிடையாது. வேலை செய்வதற்கு சம்பளத்திற்கு பதில் தங்க இடமும், உணவும் கிடைக்கிறது. அவர் ஸ்பெயினில் எந்த இடத்தில் இருக்கிறார் என சரியாக தெரியவில்லை.ஊர் திரும்பியதும் தன் பயணக் கதைகளை சில சமயம் சொல்வார்.பிரணவ் இரண்டு வருஷத்தில் ஒரு படம் நடிக்கிறார். ஒரு வருடத்தில் இரண்டு படங்களில் நடிக்குமாறு நான் அவரிடம் கூறி வருகிறேன். ஆனால் இதுவரை முழுமையாக அவன் பதிலளிக்கவில்லை. அவர் வாழ்வை சமநிலைப்படுத்த முயற்சிக்கிறார் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். என் கணவரும் மகனும் ஒன்றாக சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதை நான் விரும்பமாட்டேன். மக்கள் இருவரையும் மக்கள் ஒப்பிட்டு உயர்த்தி, தாழ்த்திப் பேசுவார்கள். அதை நான் விரும்பவில்லை” இவ்வாறு அவர் கூறியுள்ளார்