‘இசை ‘ திரைப்பட விமர்சனம்.
இயக்கம் : எஸ்.ஜே.சூர்யா
நடிப்பு : எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சாவித்திரி,
இசை : எஸ்.ஜே.சூர்யா
ஒளிப்பதிவு : சௌந்தர்ராஜன்
படத்தொகுப்பு : கே.எம்.ரியாஸ்
தமிழில் ‘அன்பே ஆருயிரே’க்குப் பின்னர், கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து மீண்டும் ‘இசை’ யை இயக்கியிருக்கிறார்எஸ்.ஜே.சூர்யா.என்பதால் ஒரு ஆர்வம் நம்மை தொற்றிக்கொள்ள இசை ,நம் கண் முன்னே ஒளி,ஒலியாக விரிகிறது. பிரபல திரைப்பட இசையமைப்பாளர் வெற்றிச்செல்வனிடம் (சத்யராஜ்) உதவியாளராக இருக்கும் ஏ.கே.சிவாவிற்கு (எஸ்.ஜே.சூர்யா) தனியாக இசையமைக்கும் வாய்ப்பு ஒன்று தேடி வருகிறது. கணினி மற்றும் மென்பொருள் உதவியுடன் புதிய உத்திகளை கையாண்டு , குருவிடம் கற்ற வித்தைகளைமுலாம் பூசி பயன்படுத்தி சினிமாவில் முதல் இடத்திற்கு வருகிறார். அதேநேரம் அவரின் குருவான வெற்றிச்செல்வன் நவீன தொழில்நுட்ப யுக்தி அறியாததால் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி வாய்ப்பில்லாமல் போகிறார். தனக்குக் கிடைத்த புகழையெல்லாம் குறுகிய காலத்திலேயே பெற்றுவிட்ட தன் சிஷ்யன் ஏ.கே.சிவாவை பழிவாங்க நினைக்கிறார் வெற்றிச்செல்வன். அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதே இந்த ‘இசை’யின் கதை..
இசையமைப்பாளர் ஏ.கே.சிவா கேரக்டர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு மிகவும் பொருந்தி போகிறது சத்யராஜ்! நடிப்பில் மிரட்டல்.!தன கேரக்டரை ஊதி தள்ளியுருக்கிறார்,உச்ச கட்ட காட்சியில் கதாநாயகி சாவித்ரியிடம் சத்யராஜ் பேசும் வசனங்களும், அவரின் பாடி லாங்குவேஜும் நிச்சயம் வேறு யாருக்கும் வராது. கதாநாயகி சாவித்ரிக்கு உண்மையிலேயே இது முதல் படமா? என ஆச்சரியமாகக் கேட்கும் அளவுக்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார். கஞ்சா கருப்பு, தம்பி ராமையா ஆகியோரும் தங்களது பங்கினை சிறப்பாகவே செய்துள்ளனர்.
முதல் பாதியில் தனது ‘அக்மார்க் ‘ விஷயங்களான ‘கிளு கிளு’ காட்சிகளை வைத்தே படத்தை நகர்த்திவிடுகிறார்இயக்குனர். ஆனால் ,நமக்கு தான் அநியாத்திற்கும் கொட்டாவி வந்து விடுகிறது.இடைவேளைக்குப் பின்னர் கடைசி 30 நிமிடங்கள் தான் விறுவிறுப்பில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.. அதுவரை பொறுமையிழந்து பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை அந்த 30 நிமிடங்கள் உற்சாகப்படுத்தியதை மறுக்க முடியாது. அதோடு கிளைமாக்ஸ் யாருமே யோசிக்காதது. தனக்கே உரிய ஸ்டைலில் முடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.அதோடு, பாடல்களிலும், பின்னணி இசையிலும் தன்னால் ஜொலிக்கவும் முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.சபாஷ் போடலாம். ஒளிப்பதிவும் கைகொடுத்திருக்கிறது. படத்தில் நிறைய இடங்களில் எடிட்டரின் ‘கத்திரி’ இன்னும் பலமாக வேலை செய்திருககலாம். இசைக்கு வலு சேர்த்திருப்பது,இயக்குனரின் வசனங்களும்,சத்யராஜ் .நாயகி சாவித்திரி ஆகியோரின் நடிப்பும்.,அதே சமயம் படத்தின்( 3 மணி நேரம் 10 நிமிடங்கள்) நீளம்,தூக்கலான கவர்ச்சிகாட்சிகள். இசைக்கு பலவீனம் சேர்த்துள்ளதையும் மறுப்பதற்கில்லை . இது ‘அவர்களின் ‘கதை இல்லை என இயக்குனர் எவ்வளவு உரக்க ச் சொன்னாலும் ,’ஞானி’,’புயல்’ இவர்களின் மோதலைத்தான் படமாக்கியி ருக் கிறார் சூர்யா எனபடம் முடிந்து செல்லும் பார்வையாளர்களின் முனுமுனுப்பை தாராளமாகவே கேட்க முடிகிறது.3 மணி நேரம் 10 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை கடைசிமுப்பது நிமிடங்களே காப்பாற்றுகிறது.