ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில்வெளியான சிங்கம் 3 படம் வெளியான ஆறே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது . இந்நிலையில் சிங்கம் 4 படம் உருவாகுமா என்பது குறித்து இயக்குனர் ஹரி மற்றும் சூர்யா பேசியுள்ளனர்.சிங்கம் 4 படம் நிச்சயம் வரும். ஆனால் அதற்கு முன்பு நானும், ஹரியும் சேர்ந்து வேறு படம் பண்ண உள்ளோம். 5 ஆண்டுகள் கழித்து சிங்கம் 4 படம் பண்ணுவோம் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.சிங்கம் 4 படம் வர 5 அல்லது 6 ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கிறேன். தற்போது நானும், சூர்யாவும் சேர்ந்து வேறு படம் பண்ண திட்டமிட்டுள்ளோம் என்கிறார் இயக்குனர் ஹரி.இந்நிலையில்,சி3 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஹரிக்கு டோயடோ “ Forturner “ காரை பரிசாக வழங்கி நன்றி தெரிவித்தார் சூர்யா. 2டி என்டர்டெயின்மென்ட் ராஜசேகர் பாண்டியன் உடனிருந்தார்