இந்த படத்துக்கா அப்படி அடிச்சிக்கிட்டீங்க. !
அட போங்கய்யா !
தொடங்கும்போதே லாஜிக்கெல்லாம் பார்க்காதீங்க என்று டைரக்டர் சக்தி சிதம்பரம் சொல்லிவிடுவதால் குறைகளை தேடுவது அனாவசியம்.பளிச்சென அதுவே முன்னிலை வகித்து விடுகிறது. அபிராமியின் குடும்பத்துக்கு எம். எல். ஏ . ஒருவரால் அந்த குடும்பத்துக்கு பிரச்சனை. வக்கீலைப் போய் பாருங்கள் என்கிற அட்வைஸ் கேட்டு அவரைப் போய் பார்க்கிறார்கள். அவர் பிணமாக கிடக்கிறார். பிரபு தேவா துணிச்சலாக இப்படியொரு வேடம் ஏற்றது வியப்புதான்.!நாகேஷ் ஏற்றிருந்த வேடம்.!
சடலமாக நடிப்பதால் சாத்தியே வைத்திருப்பார்கள் என்று எண்ணி விடாதீர்கள். வழக்கமான நையாண்டி ,நடனம் ,கலகலப்பு அவரது பாணியில்! நமது பொறுமைக்கு ஆறுதல் !
மடோனா செபாஸ்ட்டின்,அபிராமி,யாசிகா ஆனந்த் ,அபிராமி பார்க்கவன் ,அபாரமான உடல் உழைப்பினைப் போட்டிருக்கிறார்கள். களை எடுக்க போய் இருக்கலாம். இவர்களெல்லாம் இருந்தால் சிரிப்பு தெருவெல்லாம் சிந்தும் என்று நினைத்து யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ,மதுசூதன் ராவ் ,ரோபோ சங்கர்,சாம்ஸ் ,ஒய் ஜி மகேந்திரன் ,முட்டைக்கண் ஜான் விஜய் ஆகியோரின் கால் சீட்டுகளை வாங்கி நிரப்பி இருக்கிறார்கள்,படம் முடியும்வரை சிரிக்கத் தான் முடியவில்லை. இந்த கோஷ்டியில் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரும் பாடல் ஆசிரியருமான கலாட்டா நாயகன் ஜெகன் கவிராஜும் இணைந்திருக்கிறார்.இயக்குநர் சக்தி சிதம்பரமும் பாங்க் மானேஜராக நடிப்பை கொட்டியிருக்கிறார்.
.அஷ்வின் விநாயகமூர்த்தி இசை.ஜெகன்கவிராஜ் எழுத்தில் செமத்தியான குத்துப் பாட்டு.!
ஒளிப்பதிவாளர் எம்.சி.கணேஷ் பாபு,கதைக்கு ஏற்ப காட்சிப்படுத்தியிருக்கிறார்.
படம் எப்படி? !
பருத்திப்பால் ! மதுரையில் ரசிகர்கள் முன்னெல்லாம் தியேட்டரில் பாடுகிற வாழ்த்து முழக்கம் .
–தேவிமணி.