நடிகர் அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அடுத்தடுத்த படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில்,அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே அடுத்தடுத்து இரு படங்களும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் பல்கேரியாவில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் அஜித், தன்னுடைய கார் பந்தய பயிற்சிக்காக மீண்டும் ஸ்பெயின் சென்றுள்ளார். அங்கு அவருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள போர்ஷே 911 ஜி டிT3 ஆர்.எஸ் ரேசிங் காரை மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டவர், காரில் ஏறி அமர்ந்து பார்த்தும் உற்சாகமடைந்தார்.அந்தக் காரில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவும் உள்ளது. இதுவரை எந்த அரசியல் தலைவருக்கும், திரையுலக பிரபலத்திற்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காமல் இருந்த அஜித், முதல் முறையாக துணை முதல்வர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.