ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை தொடர்ந்து மீண்டும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்கிறார். தற்போது இயக்குனர் நெல்சன் ஜெயிலர்-2 படத்துக்கான திரைக்கதையை மெருகேற்றும் வேளைகளில் தனது குழுவினருடன் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம் இப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகஉள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு ப்ரோமோ வீடியோவுடன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ப்ரோமோவுக்கான படப்பிடிப்பு, அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ளதாகவும், இந்த ஜெயிலர் 2 அறிமுக வீடியோ ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.