துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி, மற்றும் ஆதிக் ரவி சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தில், அஜித்துக்கு ஜோடியாக திரிஷாநடிக்க,இவர்களுடன் அர்ஜுன் மற்றும் ஆரவ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த . தீபாவளியையொட்டி வெளியாகும் என பலரும் எதிர்பார்த்திருந் நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் காரணமாக இதன் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.இதற்கிடையே அஜித் நடித்து வரும் மற்றொரு படமான குட் பேட் அக்லி திரைப்படம் வரும் பொங்கலையொட்டி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது.இந்நிலையில்,நேற்று இரவு இப்படத்தின் டீசாராய் படக்குழு வெளியிட்டு வரும் பொங்கலுக்கு விடாமுயற்சி வெளியாகும் என அதிரடியாக அறிவித்துள்ளது.இந்த டீசரில் அர்ஜுனின் கேங் கார் ஒன்றின் டிக்கியில் இருந்து ஒரு மனிதரை வெளியே இழுத்து போடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஹீரோ அஜித்தின் இன்ட்ரோ தொடங்கி, த்ரிஷா என கதாபாத்திரங்கள் தொடர்பான ஷாட் என அடுத்தடுத்து காட்சிகள் விரிகின்றன.எல்லோரும் எல்லாமும் கை விடும் போது உன்னை நம்பு என்ற டேக் லைனோடு எதிரிகளை பந்தாடும் அஜித்தின் அதிரடி ஆக்சன்காட்சிகளுடன் நிறைவடைகிறது.