வழக்கமாக பேய் ,பிசாசு, ஆவி சம்பந்தப் பட்ட படங்கள் என்றால்பயமுறுத்தும் திகில் படங்கள் என்றுதான் கருதப்படும்.அண்மைக் காலமாக இப்படிப்பட்ட படங்கள் நகைச்சுவை கலந்து வரும்போதுரசிக்கப் படுகின்றன. ‘பிசாசு’ ‘டார்லிங்’ படவெற்றிக்குப் பின்னர்குடும்பத்தினர் விரும்பி ரசிக்கும் நட்சத்திரங்களாக பேய்களும் ஆவிகளும்மாறிவருகின்றன.இந்நிலையில்,ஸ்ரீகாந்த் நடித்துள்ள ‘ஓம் சாந்தி ஓம்’படமும் அப்படிப்பட்ட பட வரிசையில் சேர்ந்துள்ளது. ஸ்ரீகாந்துடன் நீலம் உபாத்யாயா நாயகியாக நடிக்கிறார்.’நான் கடவுள்’ ராஜேந்திரன் ,ஜூனியர் பாலையா, ஆடுகளம் நரேன், மலையாள நடிகர் பைஜூ, வினோதினி வைத்தியநாதன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். இப்படம் குறித்து இயக்குனர் சூர்யபிரபாகர் கூறியதாவது, ” இது ஆவி சம்பந்தப்பட்ட திகில் நகைச்சுவை கலந்த கதைதான்.ஐந்துஆத்மாக்கள் சம்பந்தப்பட்ட கதை இது . இப்படம் முழுக்க முழுக்ககுடும்பத்தினர் குழந்தைகளைக் கவரும்படி இருக்கும். வழக்கமாக தணிக்கைத்துறையினர் திகில் படங்களுக்கு யுஏ சான்றிதழ்தான் கொடுப்பார்கள்.இப்படத்துக்கு மட்டும்தான் யு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.பேய் ,ஆவிசம்பந்தப்பட்ட படத்தை குழந்தைகளும் ரசிக்கும்படி நகைச்சுவையாகசொல்லியிருக்கிறீர்கள் என்று அவர்களே பாராட்டிச் சொன்னார்கள்..ஆவி என்றால் பயப்பட வேண்டாம் அது நம் முன்னோர்கள்தான். ஆவிகள் எல்லாம்பாவிகள் அல்ல. அவை நம் முன்னோர்களின் ஆத்மாக்கள்தான். அவை வருவதுபயமுறுத்த அல்ல நம்மை ஆசீர்வதிக்கத்தான் என்கிற புதிய பரிமாணத்தில் படம்உருவாகியுள்ளது. என்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை கே.எம். பாஸ்கரன் கவனிக்க,,
விஜய் எபிநேசர்இசையமைத்துள்ளார்.