மைனா அமலா பால். இயக்குனர் விஜய்யின் தெய்வத் திருமகள், தலைவா,வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் அமலா பால்.விஜய் இயக்கிய தெய்வத் திருமகள் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான இரண்டே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள குடும்ப நலக் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். இம் மனு மீதான வழக்கை விசாரித்த நீதிபதி தீபிகா, இன்றுஅவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.