சிம்பு, சமீபத்தில் சந்தானம் நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார்.சிம்பு இசையமைக்கும் முதல் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த படத்தின் பாடல்கள் கம்போசிங் பணியில் ஈடுபட்டுள்ள சிம்பு, தற்போது இசையமைப்பாளர் அனிருத் பாடிய ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே ‘ரம்’ படத்திற்காக அனிருத் இசையில் சிம்பு ஒரு பாடல் பாடிய நிலையில், தற்போது சிம்பு இசையில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.