கேரளாவில் நடிகை பாவனா கடத்தப்பட்டு, பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம், விஸ்வரூபமெடுத்ததையடுத்து, தமிழ் சினிமாத் துறையில் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட சில நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில்,ஆயுத எழுத்து’ உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளவரும், பின்னணி பாடகியுமான சுசித்ரா, நடிகர் தனுஷ் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20 ஆம் தேதி, கட்டுப் போட்ட தனது கையை புகைப்படம் எடுத்து, இதற்கு தனுஷின் கூட்டம் தான் காரணம், என தனது டுவிட்டரில் தெரிவித்தவர், தற்போது, ”தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டை பற்றி அனைவரிடமும் கூற தயாராக உள்ளேன்”நான் தாக்கப்பட்டேன். என்று தான், காயம் அடைந்தது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.சுசித்ரா தனுஷ் மீது கூறிய புகாரால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் சில டுவிட்டுகளில் தனுசை பற்றி புகழ்ந்தும் கூறியுள்ளார். அதாவது ‘தனுஷ் நீங்கள் கடவுள். உங்கள் காலை காட்டுங்கள் என்று கூறியிருக்கிறார். மேலும், ’தனுஷ் என்னிடமிருந்து தள்ளியே இருங்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். சுசித்ரா தனுஷ் மீது கூறிய புகாரால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைப் பார்த்த பலரும், சுசித்ரா என்ன சொல்ல வருகிறார்?, என்று குழப்பம் அடைந்துள்ள நிலையில், இந்த டுவிட்களை அவர் பதிவிடுகிறாரா அல்லது அவரது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா, என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.சிலரோ சுசித்ராவின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து தனுஷ் மீது புகார் தெரிவித்ததாக கூறியுள்ளனர்