எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. படத்தை பார்த்த பலரும் ,படத்தின் நீளம் (3 மணி நேரம் 10 நிமிடங்கள்) ,மிக அதிகம் , அதனால் சோர்வாக இருக்கிறது என்றே குறைப்பட்டு கொண்டனர். இதில் முகம் சுளிக்கவைக்கும் கவர்ச்சி காட்சிகளும் அதிகம்.இந்நிலையில் ‘இசை’ படத்தின் ஏழு நிமிட காட்சிகளை எஸ்.ஜே.சூர்யா அதிரடியாக நீக்கி உள்ளாராம்.