
“தற்போது ஒட்டுமொத்த உலகினரும், ஆஸ்கார் விருது பெற்ற பல திறமையான கலைஞர்களை பாராட்டி கொண்டிருக்கிறது. இன்றைய நாட்களில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஏனென்றால், உலக சினிமாவால், அவர்களின் ரசனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது. அந்த வகையில், முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் எங்கள் ‘பீச்சாங்கை’ படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. வெளியான சில நாட்களிலேயே யுடியூபில் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை எங்கள் டீசர் கடந்திருப்பதே அதற்கு சிறந்த உதாரணம். எங்கள் படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி சாருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்” என்கிறார் ‘பீச்சாங்கை’ படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான பி ஜி முத்தையா.