காதலை கவித்துவமாக கூறும் “ஏனோ வானிலை மாறுதே“
வெளியான நாள் முதல் யூ டியுபில் தொடர்ந்து முதல் #10 Trendingக்குள் வலம் வந்த Youthful Magic “ஏனோ வானிலை மாறுதே” குறுந்திரை படத்தை வெள்ளித்திரை தரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி ரசனையாக இயக்கியுள்ளார் இயக்குனர் புனித்.
ஒவ்வொரு Shotம் Sweet ஆ Cute ஆ கண்ணுக்கு குளிர்ச்சியா ஒளிப்பதிவு செய்துள்ளார் வினோத்ராஜேந்திரன். புனித்தின் கதைக் களத்திற்கும் வினோத்தின் ஒளிப்பதிவிற்கும் இணைந்து காவியமாய் அமைந்துள்ளது சித்துகுமாரின் இசை.
தமிழ்குமரனின் எடிட்டிங் ஏனோ வானிலை மாறியதை எதார்த்தமாய் காட்டியிருக்கிறது. இந்த ஒட்டு மொத்தக் குழுவின் உன்னத உழைப்பு மக்களின் ஆதரவிலும் படத்தின் தரத்திலும் தெரிகிறது.
இன்று இணையத்தை ஆட்கொண்டிருக்கும் “ஏனோ வானிலை மாறுதே” இளைஞர்கள் மனதில் “அழகாய் காதல் தூறுதே“
ஏனோ வானிலை மாறுதே குறும்படம் காதலர்களை காதலுக்குள் கடத்தி செல்லும் கவிதை.
வெளியிட்டதிலிருந்து 9 நாட்களில் 18 லட்சத்திற்கும் மேல் பார்வைகளை பெற்றுள்ள ஏனோ வானிலை மாறுதே, இன்னும் ஒரு நாளில் அது 20 இலட்சம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காதலும் காமெடியும் கலந்த கதமபம், இந்த மாதிரி ஒரு காதல் நமம வாழ்க்கையிலும் வரனும்னு ஆசைப்படுற அளவுக்கு அழகாய் இருக்கறது படம். பேபி மனுஸ்ரீ கொஞ்சிகொஞ்சி நடிச்சிருக்காங்க, நகஷத்த்ராவும் அருணும் காதலை கணணியமா பிடிச்சிருக்காங்க.எப்ப வரும் எப்படி வரும்னு தெரியாத காதலை இந்த படம் Youtubeல் வந்து அழகாய் சொல்லிருக்கு.காதலை கண் குளிரும் தரத்தில், காதலை காதலின் நிறத்தில், சொல்லிய அழகிய குறும்படம் “ஏனோ வானிலை மாறுதே“