வைக்கம் விஜயலட்சுமி தனது இனிமையான குரலால் அனைவரின் காதுகளையும் வசீகரமாக்கியக்கியவர். சமீபத்தில் இவர் வீர சிவாஜி படத்தில் பாடிய சொப்பன சுந்தரி பாடல் பலரையும் கவர்ந்தது.
வைக்கம் விஜயலட்சுமி மலையாளத்தை பூர்வீகமாக கொண்டாலும் தமிழ் பாடல்களை மிகத்தெளிவாக பாடக்கூடியவர்.சமீபத்தில் இவர் வீர சிவாஜி படத்தில் பாடிய சொப்பன சுந்தரி பாடல் பலரையும் கவர்ந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வைக்கம் விஜயலட்சுமிக்கும் , சந்தோஷ் என்ற இசை பிரமுகருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 2017ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெறும் எனவும் அறிவித்தார்கள்.
இந்நிலையில் தன்னுடைய திருமணம் நின்றுவிட்டதாக வைக்கம் விஜயலட்சுமி அறிவித்தார் இது பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. தற்போது திருமணம் ரத்தானது ஏன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். “திருமணத்துக்குப் பிறகு இசை ஆசிரியராக பணிபுரிய வேண்டும், பாடகி வாழ்க்கையைத் தொடர வேண்டாம் என என்னுடைய லட்சியத்துக்கு தடையாக இருக்கிறார். முதலில் அனைத்து விதத்திலும் எனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.மேலும், திருமணத்துக்குப் பிறகு என் வீட்டிலேயே வாழ்வதாக தெரிவித்தார். தற்போது தன்னுடைய உறவினர் வீட்டில் தான் வாழவேண்டும் என்கிறார். இதனால் எனக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை. ஆகையால், திருமணம் நிறுத்தப்படுகிறது. என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இது முழுக்க நான் எடுத்த முடிவு”நான் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறேன் . சந்தோஷ் எனக்கு சினிமா சான்ஸ் தொடர்ச்சியாக வராது. உத்திரவாதமும் கிடையாது. எனவே அரசு இசை பள்ளிக்கூடத்தில் சேர்ந்து டீச்சர் ஆகிவிட்டால் கடைசி வரை சம்பளம், பென்ஷன் வரும் என கூறினார்.இது என் மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. நிச்சயதார்த்தத்துக்கு முன் பேசியபடி இல்லாமல் திடீரென மாற்றிப்பேசுகிறார். இசையை விட திருமணம் பெரியதாக தெரியவில்லை. எனவே இப்படியொரு முடிவை எடுத்துவிட்டேன் என்கிறார் விஜயலட்சுமி.