சமீபத்தில் சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில், சில நடிகைகள், நடிகர்களின் அந்தரங்க போட்டோக்கள் வெளியானது. அடுத்தது யார் வீடியோவோ ?என்ற கலக்கத்தில் பல நடிகர்,நடிகைகள் உள்ளதாக கூறப்படுகிறது.பல நடிகர், நடிகைகள் நட்பின் அடிப்படையில், சக நடிகர்களுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் தற்போது தவறான கண்ணோட்டத்துடனே பார்க்கப்படும் வாய்ப்பும் உள்ளது.இதனால் தற்போது செல்பி அல்லது புகைப்படங்கள் எடுப்பதைக்கன்டாலே அங்கிருந்து காத தூரம் ஓடி விடுகின்றனர். இந்நிலையில்,நடிகர் சத்யராஜ் மிகவும் உருக்கமாகவும், கோபமாகவும் ஒரு ஆடியோ பதிவை வெளியீட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது , ‘நீங்கள் நல்ல நண்பர்கள், காதலர் என பார்த்து தேர்ந்தெடுங்கள்.
விளையாட்டாக நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் நாளை உங்கள் வாழ்வையே சீரழிக்கலாம், பெண் என்பவள் வேற்று கிரகவாசி இல்லை, இப்படி புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் எத்தனையோ பேர் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்.இனியும் இதுப்போன்ற செயலை செய்ய வேண்டாம், இதை ஒரு பாதிக்கப்பட்ட பல பெண்களின் தகப்பனாக, நானும் கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.