தமிழில் ‘சித்திரம் பேசுதடி’, ‘தீபாவளி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை பாவனா.இவர் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி காரில் திருச்சூருக்கு வந்து கொண்டிருந்தபோது, மற்றொரு வேனில் வந்த 5 பேரால் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளானார். இதுகுறித்து பாவனா அளித்த புகாரின்பேரில் சிலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.பாவனாவின் இந்த துணிச்சலை பலரும் பாராட்டினர்.இந்நிலையில், பாவனா விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்ற பேச்சும் எழுந்தது.. இந்நிலையில், இன்று பாவனாவுக்கும் கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இவர் பாவனா நடித்த ‘ரோமியோ’ என்ற படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவீட்டார் தரப்பில் இருந்து நெருங்கிய உறவினர்கள் வெறும் 16 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து இவர்கள் விரைவில் திருமண தேதியையும் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.