சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைபாளராகவும் களமிறங்கியுள்ளார்சிம்பு . இப் படத்தில் ஏற்கனவே அவரின் நெருங்கிய நண்பர்களான அனிருத், யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் தலா ஒரு பாடலை பாடியுள்ளனர் .இந்நிலையில் சிம்புவின் இசையில் உருவான இன்னொரு பாடலை அவரது பெற்றோர் டி.ராஜேந்தர்-உஷா தம்பதியினர் பாடியுள்ளனர்.’வா முனிம்மா வா’ என்று தொடங்கும் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்கிறது சிம்புவின் வட்டம்.
தற்போது,இந்த படத்தின் ஐந்து பாடல்களின் ஒலிப்பதிவையும் சிம்பு முடித்து விட்டாராம். சிம்புவின் வேகத்தை கண்டு மிரண்டு போய் நிற்கிறது கோலிவுட்.