உலகநாயகன் கமல்ஹாசனும், லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ‘உத்தம வில்லன்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவை , வரும் (மார்ச்) மாதம் 1-ஆம் தேதி சென்னையிலுள்ள நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர் . இவ்விழாவில் பெங்களூரை சேர்ந்த கலை குழுவினரின் ‘ஆட்டக்களரி ”என்ற பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிநடக்க வுள்ளதாம். ‘உத்தம வில்லன்’ படத்தில் கேரளாவின் ‘தைய்யம் ‘கலை சம்பந்தப்பட்ட காட்சியும் இடம் பெறுகிறது. இந்த கலையுடன் தொடர்புடைய கலை தான் ‘ஆட்டக்களரி’ .‘உத்தம வில்லன்’ படத்தில் கமல்ஹாசனுடன் ஆன்ட்ரியா, பூஜா குமார், பார்வதி நாயர், ஜெயராம், இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத் உள்பட பலர் நடித்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ‘உத்தம வில்லன்’ வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது.