ஆதி – நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மரகத நாணயம்’ திரைப்படத்திற்கு, ‘U’ சான்றிதழை அளித்துள்ளது தணிக்கை குழு.
அறிமுக இயக்குநர் ஏ. ஆர். கே. சரவண் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஆனந்தராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பிரம்மானந்தம், எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.