1969–ஆம்-ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்து வெளிவந்த”அடிமைப்பெண்”படத்தை தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றம்செ ய்து “அடிமைப்பெண்-2017” என்ற பெயரில் புதிதாக சென்சார் சான்றிதழ் பெற்றுளார்கள்.விரைவில் அடிமைப்பெண்2017 வெளிவரவிருக்கிறது.
இந்த திரைப்படத்திற்கு “பத்த சேதா”உட்பட பல படங்களில் நடித்து மறைந்த பழம் பெரும் நடிகை G.சுப்புலக்ஷ்மி அவர்களின் பேரன்களான இசை வாரிசுகள் பிரசாத்-கணேஷ் சகோதரர்கள் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் இசையமைத்திருக்கிறார்கள்.படத்தில்
‘திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன்’இசை அமைத்து வெளியான ஆறு பாடல்களுக்கு பழமையின் பெருமை மாறாமல் நவீன டிஜிட்டல் முறையில் இசையமைத்திருக்கிறார்கள்..மக்கள் திலகத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில் அடிமைப்பெண் படத்திற்கு இசையமைத்ததை மாபெரும் பாக்கியமாகவே கருதுகிறோம் என்று இசை சகோதரர்கள்”பிரசாத் கணேஷ்”பெருமையோடு
கூறுகிறார்கள்.இது மட்டுமல்ல இவர்கள் இருவரும்’கணபதி வந்தாச்சு”,புதிய பயணம், பிரேம் திவானி(ஹிந்தி),சில்க்குவார் பட்டி,காப்பாத்துங்க நாளைய சினிமாவை,கையில காசு இருந்தா,…போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள்.பிரபல
பக்திப்பாடகர் வீரமணிராஜு போன்றவர்களின் பக்திப்பாடல்களுக்கு இசையமைத்து சுமார் 600-க்கும் மேல் இசைஆல்பங்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.